உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாணவர்கள் நலன் காப்பதில் வேற லெவல் முயற்சி: தினமலர் நாளிதழுக்கு பெற்றோர் சல்யூட்

மாணவர்கள் நலன் காப்பதில் வேற லெவல் முயற்சி: தினமலர் நாளிதழுக்கு பெற்றோர் சல்யூட்

தினமலர் நாளிதழ் நடத்திய கண், மனநலம் காப்பது தொடர்பான கருத்தரங்கு, மாணவர் நலன் காப்பதில் வேற 'லெவல்' முயற்சி, பெற்றோர் - மாணவர்களுக்கு இடையே உளவியல் ரீதியாக புரிதல்களை ஏற்படுத்திவிழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக 'ராயல் சல்யூட்' என பெற்றோர், மாணவர்கள் தெரிவித்தனர்.அவர்கள் கூறியதாவது:

பாராட்டும், மகிழ்ச்சியும்

- கீர்த்தனா, பெற்றோர், ஆத்திகுளம்மாணவர்கள் படிப்பு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தும் தினமலர் நாளிதழ், முதன்முறையாக மாணவர்களின் கண், மனநலம் தொடர்பாகவும், பெற்றோருக்கு உளவியல் ரீதியாக புரிதல் ஏற்படும் விதமாகவும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததற்கு பெரிய 'சல்யூட்'. எனது மகன் 5வது படிக்கிறான். தன்னம்பிக்கை வளர்ப்பது, பெற்றோர் எவ்வாறு குழந்தைகளிடம் நடந்துகொள்வது போன்ற விஷயங்கள் அருமை. குறிப்பாக 'அமில' வார்த்தைகள் பேசக்கூடாது என்ற அறிவுரையை இன்றுமுதல் பின்பற்ற முடிவு செய்துள்ளேன்.

உளவியல் அறிவுரைகள் சூப்பர்

- தேவகி, பெற்றோர், அரசரடி பிள்ளைகளை பராமரிப்பது தொடர்பாகவும், அவர்களிடம் பெற்றோர் எவ்வாறு பழக வேண்டும் என்பது தொடர்பாகவும் பல்வேறு உளவியல் ரீதியான தகவல்கள் பெற்றோருக்கு கிடைத்துள்ளன. மகன் எட்டாவது படிக்கிறார். அவருக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்த நல்ல 'டிப்ஸ்'கள் கிடைத்துள்ளன. குறிப்பாக 'பாராட்டுங்கள்...' என்ற அறிவுரை பெற்றோருக்கு மட்டுமல்ல பொதுவானது. பாராட்டுவதை பழக்கப்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளேன். நன்றி தினமலர்.

எழுந்தவுடன் சுவாமி கும்பிடுவேன்

- ஸ்ரீ நிதி, மாணவி, அண்ணாநகர்குழந்தைகள், பெற்றோர் ஆகிய இருவருக்கும் பொதுவான பல அறிவுரைகளால் இரு தரப்பிலும் புரிந்துகொள்வதற்கு இக்கருத்தரங்கு பயனுள்ளதாக இருந்தது. தற்போது பிளஸ் 1 படிக்கிறேன். இதுவரை 'அலைபேசி பயன்பாட்டை குறைத்துக்கொள்' என அம்மா கூறிவந்தார். கேட்கவில்லை. ஆனால் அதை குறைப்பதால் என்ன பயன்கள் என இக்கருத்தரங்கில் தெரிந்து அம்மா சொன்னதை கேட்க முடிவு செய்துள்ளேன். அதுபோல் காலை எழுந்ததும் சுவாமி கும்பிடும் பழக்கத்தை தொடர உறுதியேற்றுள்ளேன்.

அலைபேசியை தவிர்ப்பேன்

-கார்த்திகா, மாணவி, நாகமலைபுதுக்கோட்டைஏழாம் வகுப்பு படிக்கிறேன். அப்பா, அண்ணனுடன் பங்கேற்றேன். எப்படி மனதை ஒருமுகப்படுத்தி படிக்க வேண்டும் என்பதை கற்றுக்கொண்டேன். ஒவ்வொரு மாணவருக்கும் ஒருவகை தனித்திறமை உள்ளது என்பதை புரிந்துகொண்டேன். அதை மேலும் எவ்வாறு வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற அறிவுரையும் பயனுள்ளதாக இருந்தது. இரவில் அலைபேசி பயன்படுத்தினால் துாக்கம் பாதித்து கண்களுக்கு கெடுதல் ஏற்படும் என்பதை ஆழமாக புரிந்துகொண்டேன். இனிதேவையில்லாமல் அலைபேசி பயன்படுத்த மாட்டேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி