மாணவியருக்கு பாராட்டு
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் அருள்மிகு ஆண்டவர் சுப்பிரமணிய சுவாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சியும், பிளஸ் 2 அரசு பொது தேர்வு எழுதிய 128 மாணவியரில் 127 பேர் தேர்ச்சி அடைந்தனர். தேர்ச்சி அடைந்த மாணவியரை பள்ளிச் செயலாளர் ஞானசேகரன், தலைமை ஆசிரியர் அருந்தவம் உட்பட ஆசிரியர்கள் பாராட்டினர்.