உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆடி 18 விதைப்பு; விவசாயிகள் தயார்

ஆடி 18 விதைப்பு; விவசாயிகள் தயார்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் வட்டார கிராமங்களில் ஆடி 18 விதைப்பிற்கு தயாராகும் வகையில் விவசாயிகள் தற்போது கோடை உழவை துவக்கி உள்ளனர்.திருப்பரங்குன்றம் பகுதிகளில் தொடர் மழை பெய்தது. அதை பயன்படுத்தி விவசாயிகள் நிலங்களை உழுது வருகின்றனர். விவசாயிகள் கூறுகையில், ''ஆடி 18 விசேஷ நாள் என்பதால் அன்றைய தினம் காய்கறிகள், பயிறு வகைகள் விதைப்போம். பலர் நெல் நாற்றையும் பாவுவதுண்டு. அதற்காகவே தற்போது கோடை உழவு செய்து வருகிறோம். கோடை உழவால் மழைநீரை நிலங்கள் சேமித்து வைக்கும். பயிர்களுக்கு தீமை செய்யும் பூச்சிகள் வெளியேறும். நிலம் பண்படும். விளைச்சல் அதிகமாகும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை