உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உண்மை தன்மை சான்றிதழ்: தேர்வுத் துறை மெத்தனம்

உண்மை தன்மை சான்றிதழ்: தேர்வுத் துறை மெத்தனம்

மதுரை: 'மதுரையில் கல்வி சான்றிதழ்களுக்கான உண்மை தன்மை அறிக்கை வழங்குவதில் தேர்வுத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் மெத்தனமாக செயல்படுகிறது' என ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கல்வி பிரிவு அலுவலகத்திலிருந்து பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 கல்வி சான்றிதழ்கள் மீது உண்மை தன்மை அறிக்கை கோரி தேர்வுத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தேர்வுத்துறை அலுவலகத்தில் ஆவணங்கள் முறையாக பராமரிக்காத காரணத்தால் உண்மை தன்மை சான்று அளிப்பதில் தாமதம், குழப்பங்கள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சீனிவாசன், வட்ட செயலாளர் ஜோசப் ஜெயசீலன், நிர்வாகிகள் தேர்வுத்துறை உதவி இயக்குநர் பிரதீபாவை சந்தித்து மனு அளித்து, சான்றிதழ் அளிக்கும் நடைமுறையை விரைவுபடுத்த வலியுறுத்தினர்.சீனிவாசன் கூறுகையில், தேர்வுத்துறை அலுவலகத்தில் பதிவேடுகள் உரிய முறையில் பராமரிக்கவில்லை. இதனால் உண்மை தன்மை அளிப்பது தாமதமாகிறது. குறிப்பாக மாநகராட்சி ஆசிரியர்கள் அதிகம் பாதிக்கின்றனர் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !