பா.ஜ., கையெழுத்து இயக்கம்
வாடிப்பட்டி : வாடிப்பட்டி தெற்கு மண்டல் பா.ஜ., சார்பில் தென்கரையில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்து இயக்கம் நடந்தது. மதுரை கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன் ஆலோசனை வழங்கினார். முன்னாள் மன்ற தலைவர் அழகர்சாமி தலைமை வகித்தார். மண்டல் தலைவர் முத்துப்பாண்டி, பொதுச்செயலாளர் நாட்டரசன், கிளை தலைவர்கள் செந்தில்குமார், கருப்பதேவர், வழக்கறிஞரணி விஜயகுமார், பெரியசாமி, மண்டல் பொருளாளர் மகாலிங்கம், நிர்வாகிகள் விக்னேஸ்வரன், மகேஷ் கையெழுத்து பெற்றனர்.