உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பார்வையிழப்பை முற்றிலும் நீக்க வேண்டும்: டாக்டர் நாச்சியார் பேச்சு

பார்வையிழப்பை முற்றிலும் நீக்க வேண்டும்: டாக்டர் நாச்சியார் பேச்சு

மதுரை: மதுரை காந்திய சிந்தனைக் கல்லுாரி, தமிழ்நாடு காந்தி நினைவு நிதி, சார்பில் காந்தி மியூசியத்தில் விழுமியக் கல்வி பேராசிரியர்களுக்கான ஒரு நாள் புத்தாக்கப் பயற்சி நடந்தது. தேசிய காந்தி மியூசிய இயக்குநர் அண்ணாமலை, காமராஜ் பல்கலை காந்தியியல் ராமலிங்கர் தத்துவத் துறை முன்னாள் தலைவர் ஆண்டியப்பன் கலந்து கொண்டனர்.சிறப்பு விருந்தினர் அரவிந்த் கண் மருத்துவமனை கவுரவ இயக்குநர் டாக்டர் நாச்சியார் பேசியதாவது: காந்திய சிந்தனைகள் எங்கள் மருத்துவமனையின் தோற்றத்திற்கு பெரிதும் உதவியது. நம் சேவை கடைக்கோடி மக்களுக்கு செல்ல வேண்டும். எங்களின் குறிக்கோள் தேவையற்ற பார்வையின்மையை அறவே நீக்கவேண்டும்' என்பதே. இது உலகளவில் பரவி சமூகத்தில் பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் செல்ல வேண்டும். இனி வரும் தலைமுறையினருக்கு காந்தியை பார்க்க வாய்ப்பு இல்லை. நீங்கள் செய்யும் நல்வினைகளால் அவரை பார்க்க வேண்டும் என்றார்.காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ், கல்வி அலுவலர் நடராஜன், காந்தி நினைவு நிதி உறுப்பினர் சந்திரசேகரன், மியூசிய பொருளாளர் செந்தில்குமார் உடனிருந்தனர். செயலாளர் நந்தாராவ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி