மேலும் செய்திகள்
செப்.6 தமுக்கத்தில் புத்தகத் திருவிழா
29-Aug-2024
மதுரை: மதுரை மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் புத்தகத் திருவிழா இன்று தமுக்கம் மைதானத்தில் (செப்.6) துவங்கி செப்.16 வரை நடக்கிறது.இத்திருவிழாவில் 200க்கும் மேற்பட்ட புத்தக ஸ்டால்கள் இடம்பெற்றுள்ளன. இன்று மாலை 6:00 மணிக்கு கலெக்டர் சங்கீதா தலைமையில் அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன் ஆகியோர் துவக்கி வைக்கின்றனர். மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், பபாசி தலைவர் சேதுசொக்கலிங்கம் பங்கேற்கின்றனர்.இந்நிகழ்ச்சியில் 'இலக்கியத்தில் காதல்' என்ற தலைப்பில் ஓய்வு பெற்ற தலைமைச் செயலர் இறையன்பு, 'திரை இசையில் இலக்கியம்' என்ற தலைப்பில் சிவகுருநாதன் ஆகியோர் பேசுகின்றனர். தொடர்ந்து தினமும் மாலையில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பேச்சாளர்கள் பங்கேற்கும் கருத்தரங்கு, பட்டிமன்றம் நடைபெறும். தினமும் காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை ஸ்டால்களை பார்வையிடலாம். அனுமதி இலவசம். பள்ளி மாணவர்களுக்கு புத்தக விற்பனையில் தள்ளுபடி உண்டு.
29-Aug-2024