உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாட்டு வண்டி பந்தயம்

மாட்டு வண்டி பந்தயம்

மேலுார்,: து.அம்பலகாரன்பட்டியில் சுந்தாயி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.பெரியமாடு பந்தயத்தில் 13 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதில் தும்பைபட்டி மருது, கூடலுார் சரவணன், நரசிங்கம்பட்டி கற்குடைய அய்யனார், தும்பைபட்டி ராஜேஷ், மேலுார் அழகன் கவுசிக் மாடுகள் முதல் 5 பரிசுகளை வென்றன. சிறிய மாடு பந்தயத்தில் 37 ஜோடி மாடுகள் கலந்து கொண்டதால் இரண்டு பிரிவுகளாக போட்டி நடந்தது. தும்பைபட்டி ஜெயராமன், தேனி பவி வசந்த் முதல் பரிசு, பாகனேரி புகழேந்தி, ஆட்டுக்குளம் அழகர்மலையான் 2ம் பரிசு, நாட்டாணி சூர்யா, தனியாமங்கலம் போஸ்பாண்டி 3ம் பரிசு, கொடுக்கம்பட்டி சிவலிங்கம், அ.வல்லாளபட்டி கனகசபை 4ம் பரிசு, நரசிங்கம்பட்டி ராமசாமி, தேனி அருந்ததி ஆகியோரது மாடுகள் 5ம் பரிசை வென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை