உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / புகாரை வாபஸ் பெறக்கோரி தாக்கிய இருவர் மீது வழக்கு

புகாரை வாபஸ் பெறக்கோரி தாக்கிய இருவர் மீது வழக்கு

எழுமலை: எழுமலை அருகே மல்லப்புரம் ஊராட்சி செயலர் சின்னச்சாமி, 32. நேற்று காலையில் அலுவலகத்தில் இருந்த போது அதே ஊரைச் சேர்ந்த தமிழரசன் 42, என்பவர் தான் செல்பவர்களுக்குத்தான் வேலை உறுதியளிப்புத்திட்டத்தில் பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மிரட்டியுள்ளார். இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. எம்.கல்லுப்பட்டி போலீசில் ஊராட்சி செயலர் கொடுத்த புகாரில் போலீசார் தமிழரசனைக் கைது செய்து விசாரணை நடத்தினர்.

தாக்குதல்

சேடபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலர்களிடம் இத்தகவல் தெரிவித்த விட்டு சின்னச்சாமி மல்லப்புரத்திற்கு டூ வீலரில் திரும்பி வந்தார். அவரை வழிமறித்த தமிழரசனின் உறவினர்கள் ராஜேஷ்குமார், அஜித் ஆகியோர் தமிழரசன் மீது போலீசில் கொடுத்த புகாரை வாபஸ் பெறவேண்டும் என கட்டையால் தாக்கியுள்ளனர். அவரை டூவீலரில் ஏற்றிச் சென்று கத்தியை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். காயமடைந்த அவரை போலீசார் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ராஜேஷ்குமார், அஜித் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ