மேலும் செய்திகள்
பனிமயமாதா சர்ச் திருவிழா பேனர்களை அகற்ற உத்தரவு
07-Aug-2024
மதுரை : மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர்.பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள நுழைவு வாயிலை அகற்ற நடவடிக்கை கோரிய வழக்கில்,'இதில் எத்தகைய நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது குறித்து மாநகராட்சி கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை வழக்கறிஞர் ஜைனப்பீவி தாக்கல் செய்த பொதுநல மனு:மாட்டுத்தாவணியில்எம்.ஜி.ஆர். பஸ் ஸ்டாண்ட், ஆம்னி பஸ் ஸ்டாண்ட் அருகே நக்கீரர் தோரண நுழைவு வாயில் (ஆர்ச்) உள்ளது. அக்குறுகிய பகுதியை கடந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசல், விபத்து ஏற்படுகிறது.மாநகராட்சி எல்லை உயர்நீதிமன்றம் வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதற்கேற்ப நுழைவு வாயிலை வேறு இடத்திற்கு மாற்றலாம். மாட்டுத்தாவணியிலுள்ள பழமையான நுழைவு வாயிலை அகற்ற வேண்டும் அல்லது சுவரை மாற்றியமைத்து விரிவாக்கம் செய்யக்கோரி மாநகராட்சி கமிஷனர், போலீஸ் கமிஷனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு:இதில் எத்தகைய நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது குறித்து மாநகராட்சி கமிஷனர் செப்.10ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.
07-Aug-2024