உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாணவிகளுக்கு குறுவட்ட கபடி போட்டி

மாணவிகளுக்கு குறுவட்ட கபடி போட்டி

உசிலம்பட்டி : உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாணவிகளுக்கான குறுவட்ட கபடி போட்டி நடந்தது. தலைமை ஆசிரியர் பரமசிவம் துவக்கி வைத்தார்.14 வயதுக்குட்பட்ட மாணவியர் பிரிவின் இறுதிப்போட்டியில் விக்கிரமங்கலம் அரசு கள்ளர்மேல்நிலைப்பள்ளி, உசிலம்பட்டி டி.இ.எல்.சி., பள்ளி அணியினர் மோதினர். இதில் விக்கிரமங்கலம் பள்ளி அணி வெற்றி பெற்றது. 17 வயதுக்குட்பட்ட பிரிவின் இறுதிப்போட்டியில் பாப்பாபட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி, உசிலம்பட்டி டி.இ.எல்.சி., பள்ளி அணிகள் மோதின. இதில் பாப்பாபட்டி பள்ளி வென்றது. 19 வயதுக்குட்பட்ட பிரிவின் இறுதிப்போட்டியில் தும்மக்குண்டு அரசுகள்ளர் மேல்நிலைப்பள்ளி, உசிலம்பட்டி டி.இ.எல்.சி., பள்ளிகள் மோதின. இதில் தும்மக்குண்டு பள்ளி வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ