உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வங்கிக் கணக்கு துவக்கி மோசடி செய்ததாக புகார்

வங்கிக் கணக்கு துவக்கி மோசடி செய்ததாக புகார்

மதுரை : மதுரையில் வங்கிக் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி பெண்களிடம் ரூ. பல கோடி மோசடி செய்ததாக கலெக்டர் சங்கீதாவிடம் பெண்கள் புகார் தெரிவித்தனர்.எச்.எம்.எஸ்., காலனி பெண்கள் சமூக நல ஆர்வலர் கவுரி என்பவருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் கொடுக்க வந்தனர். டெல்சிராணி என்பவரின் மனு: எங்கள் பகுதியில் வசிக்கும் ஒரு பெண், வங்கியில் கடன் தருவதாகக் கூறி அவரது அலைபேசி 'சிம் கார்டை' பயன்படுத்தி ராக்கு, புஷ்பராணி மற்றும் எனது பெயரில் கணக்கு துவங்கி, தலா ரூ.50 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். இதுகுறித்து தெரிய வந்ததும் புகார் கொடுத்தும் பயனில்லை. கேட்டால் மிரட்டுகின்றனர். எங்கள் பெயரில் துவக்கிய வங்கிக் கணக்கில் ரூ. பல கோடிகளுக்கு தவறான பண பரிவர்த்தனை செய்துள்ளனர். இதுபோல பல பெண்களின் பெயரில் மோசடி நடந்துள்ளது. காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை