உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அவதிப்படும் ஆழ்வார்புரம் வைகை கரையில் கட்டட கழிவு

அவதிப்படும் ஆழ்வார்புரம் வைகை கரையில் கட்டட கழிவு

மதுரை: மதுரை ஆழ்வார்புரம் வைகை வடகரை ரோடு முழுவதும் கட்டட கழிவு குவியலும் குப்பையுமாக தேங்கி கிடக்கிறது.அரசு மருத்துவமனையின் பின்பகுதியான இந்த ரோட்டின் ஒருபக்கம் மருத்துவமனை சுற்றுச்சுவர் செல்கிறது. சுவரின் பின்பக்கம் அரை கி.மீ., நீளத்திற்கு கட்டடம் இடித்த சிமென்ட் சிலாப் குவியலாய் தேங்கி கிடப்பதால் மூன்றடி அகலத்திற்கு ரோடு பயன்பாட்டில் இல்லை என்கிறார் இப்பகுதி பரமன்.அவர் கூறியதாவது: அரசு மருத்துவமனையில் காலையில் கழிப்பறைகளை பயன்படுத்தும் போதெல்லாம் பாதாள சாக்கடை வழியாக இங்குள்ள காம்பவுண்டில் கழிவுநீர் அரையடி ஆழத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்கும். காம்பவுண்டில் உள்ள பத்து குடியிருப்புகளைச் சேர்ந்தவர்களும் கழிவுநீரில் தான் நடந்து செல்கிறோம். குடிநீர் குழாய் பதிக்க ரோடு தோண்டி ௨ மாதங்களாகிறது. அகலம் குறைவான இந்த ரோட்டின் நடுவில் பேவர் பிளாக் கற்களை எடுத்து குழாய் பதித்தபின் பள்ளத்தை சரியாக மூடவில்லை.இதனால் ஒருபக்கம் அதிக பள்ளமாக இருப்பதால் வாகனங்கள் ஒரே நேரத்தில் எதிரெதிரே செல்ல முடியவில்லை. பொது சுகாதார கழிப்பறை ஓராண்டாக செயல்படவில்லை. 3 தண்ணீர் தொட்டி அமைத்தும் இரண்டாண்டாக காட்சிப்பொருளாக உள்ளது. தொலைவில் உள்ள தண்ணீர்த்தொட்டியில் இருந்து தண்ணீர் எடுத்து வருகிறோம். எங்களின் பிரச்னையை யாரும் கண்டு கொள்ளவில்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ