உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; வக்பு வாரிய தலைவர் ஆஜர்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; வக்பு வாரிய தலைவர் ஆஜர்

மதுரை: திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூர் காஜா முகைதீன்.இவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: பேகம்பூர் மசூதி மற்றும் தர்கா சொத்துக்களை நிர்வாகிக்க வெளிப்படையாக தேர்தல் நடத்த 2023 ல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை பின்பற்றாமல் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதில் விதிமீறல் உள்ளது. நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை.தமிழக வக்புவாரிய தலைமை செயல் அதிகாரி தாரேஸ் அகமது, தலைவர் அப்துல் ரகுமான் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விசாரித்தார். தாரேஸ் அகமது, அப்துல் ரகுமான் ஆஜராகினர்.நீதிபதி: சொத்துக்களை நிர்வகிக்க குழுவிற்கு இடைக்காலத் தடை விதித்து ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு நீட்டிக்கப்படுகிறது. விசாரணை 4 வாரங்கள் ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ