உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அணைத்திட்டம் டி.ஆர்.ஓ. ஆய்வு

அணைத்திட்டம் டி.ஆர்.ஓ. ஆய்வு

பேரையூர்: பேரையூர் தாலுகா சதுரகிரி மலை அடிவாரம் துள்ளுக்குட்டிநாயக்கனுாரில் 1984 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்தபோது அணைக்கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.இத்தாலுகாவில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் மானாவாரி நிலமாகஉள்ளது.இப்பகுதியில் ஆறுகளோ, அணைகளோ இல்லை. கண்மாய் மற்றும் கிணற்று பாசனத்தை நம்பியே விவசாயம் நடக்கிறது. இப்பகுதி முழுவதும் விவசாயத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டுள்ளது. 39 ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டிய டேரா பாறை அணைத் திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என விவசாயிகள் பல முறை போராட்டம் நடத்தினர்.இந்நிலையில் டி.ஆர்.ஓ., சக்திவேல் தலைமையில் டேராபாறை அணை கட்டுவதற்கான ஆய்வுப்பணிகள் நடந்தது. இதில் ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன், தாசில்தார் செல்லபாண்டியன், துணைத் தாசில்தார் வீரமுருகன்பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை