| ADDED : ஜூன் 17, 2024 01:00 AM
திருநகர்: மதுரை திருநகர் வெங்கடேஸ்வரா மெயின் ரோடு 10 ஆண்டுகளுக்கு மேல் பராமரிப்பின்றி மேடு பள்ளங்களாக உள்ளதால் வாகனம் ஓட்டுபவர்கள் சிரமம் அடைகின்றனர். திருநகர், மகாலட்சுமி காலனி, சீனிவாசா நகர், விளாச்சேரி பகுதிகளுக்கு செல்வோர் இந்த ரோட்டை பயன்படுத்துகின்றனர். திருநகரிலிருந்து தனக்கன்குளம், திருமங்கலம், தோப்பூர் செல்பவர்களும் இந்த ரோட்டில் செல்கின்றனர். திருநகருக்குள் இருந்து வரும் அரசு டவுன் பஸ்களும் ஒரு வழிப்பாதையாக இந்த ரோட்டில்தான் செல்கின்றன. அந்த ரோடு முழுவதும் சேதம் அடைந்து குண்டும் குழியமாக உள்ளன. இரவு நேரங்களில் டூ வீலரில் செல்வோர் கீழே விழுந்த காயம் அடைகின்றனர்.அரசு டவுன் பஸ்கள் ஓட்டை உடைசலாக இருப்பதால் அந்த ரோட்டில் பஸ்களை ஓட்டிச் செல்லும் டிரைவர்கள் அவதிப்படுவதுடன், பயணிகளும் மிகுந்த சிரமம் அடைகின்றனர். அந்த ரோட்டை முழுமையாக சீரமைக்கவோ அல்லது பள்ளங்களை சீரமைக்கவோ நடவடிக்கை தேவை.