உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மலைக் கிராம வளர்ச்சி பணிகளில் மாவட்ட நிர்வாகம்

மலைக் கிராம வளர்ச்சி பணிகளில் மாவட்ட நிர்வாகம்

மதுரை : மதுரை மாவட்ட மலைக் கிராம பகுதிகளில் வளர்ச்சித் திட்ட பணிகள் நடந்து வருகின்றன.பின்தங்கிய பகுதி வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்த சேடப்பட்டி ஒன்றியம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கல்வி, விவசாயம், கழிவுநீர் மேலாண்மை, ரோடு உட்பட பல்வேறு அம்சங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மண்டல அளவில் சிறப்பு பயிற்சி சமீபத்தில் நடந்தது. இதேபோல சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழும் மேற்கு தொடர்ச்சி மலைக் கிராமங்களில் பணிகள் நடக்கின்றன. சேடப்பட்டி, செல்லம்பட்டி, உசிலம்பட்டி ஒன்றிய பகுதியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு சில ஆண்டுகளாக கட்டமைப்பு பணிகள் நடக்கின்றன. விவசாய துறை சார்பில் விளைபொருட்களின் மதிப்பு கூட்டுதல், மூலிகை சேகரிப்பு, விவசாய பொறியியல் துறை சார்பில் தடுப்பணை கட்டுதல் பணிகள் நடந்தன. அங்கன்வாடி, பள்ளி, மருத்துவமனைகளில் சுற்றுச்சுவர் அமைத்தல் போன்ற பணிகளுக்கு ஏற்பாடுகள் நடக்கிறது.மேலும் கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அலங்காநல்லுார், கொட்டாம்பட்டி ஒன்றியங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனுடன் மேலுார், வாடிப்பட்டி மலைப்பகுதி கிராமங்களிலும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ