உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை கோடவுனில் ஓட்டு இயந்திரங்கள்

மதுரை கோடவுனில் ஓட்டு இயந்திரங்கள்

மதுரை: மதுரை லோக்சபா தொகுதியில் தேர்தல் ஏப்.,19ல் நடந்தது. ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4 ல் நடந்தது. இதையடுத்து மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள தேர்தல் கமிஷன் ஏற்பாட்டில் கட்டப்பட்ட கோடவுனில் பாதுகாப்பாக கொண்டு வைக்கப்பட்டது.மொத்தம் 2 ஆயிரத்து 751 ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்டவை மற்றும் 20 சதவீத அளவுக்கு 'ரிசர்வ்'வில் வைக்கப்பட்டிருந்த இயந்திரங்கள் என மொத்தம் 3303 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 3574 வி.வி.பேட் இயந்திரங்கள் என அனைத்தும் கோடவுனில் டி.ஆர்.ஓ., சக்திவேல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கண்ணன் மற்றும் கட்சிகளின் ஏஜென்டுகள் முன்னிலையில் கொண்டு வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் விருதுநகர் தொகுதிக்குள் அடங்கும் சட்டசபை தொகுதிகளான திருமங்கலம், திருப்பரங்குன்றம், தேனி தொகுதிக்குள் அடங்கும் உசிலம்பட்டி, சோழவந்தான் தொகுதிகளில் பயன்படுத்திய ஓட்டுப்பதிவு இயந்திரங்களும் அம்மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் கோரிக்கைப்படி மதுரையில் வைக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ