செயற்குழுகூட்டம்
மேலுார் மேலுாரில் அனைத்து துறை ஓய்வு பெற்றவர்கள் நலச்சங்க செயற்குழுக் கூட்டம் தலைவர் தமிழையா தலைமையில் நடந்தது. செயலாளர் ஸ்ரீகண்டன் மாதாந்திர அறிக்கையும், பொருளாளர் ஆதிசிவன் நிதிநிலை அறிக்கையும் வாசித்தனர். செயல் தலைவர் மணி, ஆலோசகர்கள் ஜெயராஜ், பாண்டி உள்ளிட்டோர் சங்க வளர்ச்சி, போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைபடியை காலதாமதம் செய்யாமல் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய கவுரவ தலைவர் வீரணன் நியமிக்கப்பட்டார்.