உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலி நியமன ஆணை; ரூ.3.12 லட்சம் மோசடி

போலி நியமன ஆணை; ரூ.3.12 லட்சம் மோசடி

மதுரை : மதுரை ஜெய்ஹிந்த்புரம் குமாரவேல் 56. இவரது நண்பர் மூலம் அறிமுகமானவர் சிவகங்கை மாவட்டம் செட்டிக்குளம் ராஜசேகரன். இவர் அரசு போட்டித்தேர்வுகளுக்காக பயிற்சி அளிக்கும் மையம் நடத்தி வருகிறார். பணம் கொடுத்தால் குமாரவேல் மகனுக்கு அரசு பத்திரப்பதிவு துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறினார். இதை நம்பி ரூ.3.12 லட்சம் குமாரவேல் கொடுத்தார்.சிறிது நாட்களுக்கு பிறகு மதுரை மாவட்டம் தாமரைப்பட்டி பதிவுத்துறை அலுவலகத்தில் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளதாககூறி அரசு முத்திரையுடன் கூடிய உத்தரவை ராஜசேகரன் வழங்கி, மேலும் ரூ.2 லட்சம் கேட்டார். உத்தரவின் நம்பகத்தன்மையை குமாரவேல் ஆய்வு செய்தபோது அது போலியானது தெரிந்தது. பணத்தை திருப்பிக்கேட்டபோது ராஜசேகரன் தரமறுத்து மிரட்டியதாக ஜெய்ஹிந்த்புரம் போலீசார்வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ