விவசாயிகளே மரக்கன்று தயார்
மதுரை : விவசாய நிலத்தில் நடுவதற்கான மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட வன அலுவலர் தருண்குமார் தெரிவித்தார். விவசாய நிலத்தில் தனிப்பயிராகவோ, வரப்பு பயிராகவோ மரக்கன்றுகளை நட தமிழ்நாடு பசுமைப்போர்வை இயக்கத்தின் கீழ் வனத்துறை மூலம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. குறு, சிறு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும். வடகிழக்கு பருவமழை துவங்கும் நிலையில் செப்.,ல் விநியோகம் தொடங்கும் என்றார்.