அழகர்கோவிலில் இலவச திருமணம்
அழகர்கோவில்; அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் முதல்வர் ஸ்டாலினின் சட்டசபை அறிவிப்பின் படி இரண்டு ஜோடிகளுக்கு இலவச திருமணம் கோயில் நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டது.நான்கு கிராம் தங்கத் தாலி, கட்டில், மெத்தை, பீரோ, பாத்திரங்கள் உள்ளிட்டசீர்வரிசை பொருட்கள் கோயில் நிர்வாகம் சார்பில்மணமக்களுக்குவழங்கப்பட்டன. புதுமண தம்பதிகளுக்கும் உறவினர்களுக்கும்திருமண விருந்து வழங்கப்பட்டது.