உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இரவில் ஆற்றுப்பாலம் சுற்றி வர பயப்படும் அரசு டாக்டர்கள் பாதுகாப்பு கருதி ஒரே வழியை பயன்படுத்த திட்டம்

இரவில் ஆற்றுப்பாலம் சுற்றி வர பயப்படும் அரசு டாக்டர்கள் பாதுகாப்பு கருதி ஒரே வழியை பயன்படுத்த திட்டம்

மதுரை: கோல்கட்டா பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக மதுரை அரசு மருத்துவக்கல்லுாரி மற்றும் அரசு மருத்துவமனையில் இருட்டான பகுதிகள் அடையாளம் காணப்பட்டன.பழைய அரசு மருத்துவமனை, பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை (எஸ்.எஸ்.பி.), தீவிர விபத்து பிரிவு (டி.சி.சி.,) மற்றும் அரசு மருத்துவக் கல்லுாரி வளாகங்கள் உள்ளன. எஸ்.எஸ்.பி. கட்டடத்தின் உள்ளே நுழையவும் வெளியேறவும் ஒரே வழி தான் உள்ளது.தீவிர விபத்து பிரிவு கட்டடத்தின் சுரங்கப்பாதை பார்க்கிங் இரவில் வெளிச்சமின்றி ஆபத்தாக உள்ளதால் இரவு 9:00 முதல் காலை 6:00 மணி வரை மூட ஏற்பாடு செய்யப்பட்டது. பழைய அரசு மருத்துவமனைக்கு செல்லவும் வெளியேறவும் நிறைய வழிகள் உள்ளன. அவற்றை ஒரே வழியாக்குவது குறித்து மருத்துவ அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். சிறைவாசிகளின் வார்டு மற்றும் குழந்தைகள் பார்க்கிங் பகுதி இருட்டான பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது என்கின்றனர் டாக்டர்கள்.அவர்கள் கூறியதாவது: தற்போது மார்ச்சுவரி வழியாக ஒருவழியும் முன்புற வாசலும் பயன்படுத்தப்படுகிறது. மார்ச்சுவரி கேட் இரவில் மூடப்பட்டு விடும். மருத்துவமனையில் பணிபுரியும் முதுநிலை பயிற்சி டாக்டர்கள், ஹவுஸ் சர்ஜன்கள் மருத்துவமனைக்கு சற்று தள்ளியுள்ள வளாக விடுதிகளில் தங்கியுள்ளனர். பகலில் மார்ச்சுவரி கேட் வழியாக மருத்துவமனைக்கு செல்கின்றனர். இரவில் கேட் மூடப்படுவதால் வைகை ஆற்றுப்பாலம் வரை டூவீலரில் சென்று முன்புற வாசலுக்கு வருகின்றனர். இந்த பாதை பாதுகாப்பின்றி இருப்பதால் தற்போது அமைக்கப்பட்டுள்ள பேரிகார்டை அகற்றி நேரடியாக முன்புற வாசலுக்கு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். மருத்துவமனை நிர்வாகிகளிடம் கோரிக்கை விடுத்ததை அடுத்து நிர்வாகம் சார்பில் போலீசாருக்கும் மனு அனுப்பப்பட்டது. அது இன்னும் பரிசீலிக்கப்படாமல் உள்ளது.மேலும் அரசு மருத்துவக் கல்லுாரியின் பழைய கேட் மற்றும் ஐ.எம்.ஏ. வளாகத்திற்கு இடைப்பட்ட பகுதி பாதுகாப்பற்ற பகுதியாக கண்டறிந்துள்ளோம். எல்லா இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள், மின்விளக்குகளை பொருத்த வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ