மேலும் செய்திகள்
கிராம உதவியாளர் சங்க ஆர்ப்பாட்டம்
08-Aug-2024
மதுரை : மதுரையில் அரசு அலுவலகங்கள் முன்பாக அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கருவூலத்துறையின் களஞ்சியம் செயலியில் அரசு ஊழியர்கள் தனிப்பட்ட விடுப்புகள், பி.எப்., விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வலியறுத்துவது, நிர்வாகப் பணியிடங்களை முழுமையாக ஒழிக்க திட்டமிடுவது போன்றவற்றை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில் துணைத் தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் மணிகண்டன்,அமுதா, கணேசன், அழகேசன், மணிவாசகம், முனியசாமி, ரமேஷ், மாரி, கல்யாணசுந்தரம், மேனகா உட்பட பலர் பங்கேற்றனர். முன்னாள் தலைவர் நடராஜன் வாழ்த்தி பேசினார். இதேபோல திருமங்கலம், உசிலம்பட்டி, மேலுாரிலும் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.உசிலம்பட்டி: ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக மாவட்டத்தலைவர் சின்னப்பொன்னு தலைமை வகித்தார். நிர்வாகிகள் செல்வராணி, ஆறுமுகம், சுரேந்திரன், மாநிலச் செயலாளர் நுார்ஜகான் உள்பட பலர் பங்கேற்றனர்.
08-Aug-2024