உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அரசு ஓய்வூதியர் சங்க கூட்டம்

அரசு ஓய்வூதியர் சங்க கூட்டம்

வாடிப்பட்டி : வாடிப்பட்டியில் அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பாக 8வது வட்ட கிளை பேரவை கூட்டம் கிளைத் தலைவர் மணி தலைமையில் நடந்தது.இணைச் செயலாளர்கள் ஆறுமுகம், லட்சுமி முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். மாவட்ட இணைச் செயலாளர் பானு துவக்கி வைத்தார். செயலாளர் வேல்மயில், பொருளாளர் பாண்டியம்மாள் அறிக்கை வாசித்தார்.ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு உறுப்பினர் கணேசன், தலைவர் கிருஷ்ணன் பங்கேற்றனர். ஓய்வுபெற்ற சத்துணவு அங்கன்வாடி கிராம உதவியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்குதல், வாடிப்பட்டி தாலுகாவில் மகளிர் கலை கல்லுாரி, மருத்துவமனையில் தலை காய சிகிச்சை பிரிவு துவங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயற்குழு உறுப்பினர் சுந்தர் நன்றி கூறினார்.

மேலுார்

வட்ட துணைத் தலைவர் தனபாக்கியம் வரவேற்றார். கிளைத் தலைவர் கிருபாகரன் சக்திராஜ் தலைமை வகித்தார். இணைச் செயலாளர் சந்திரசேகபாண்டியன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் பாலமுருகன், துணைத் தலைவர் சொக்கலிங்கம், செயலாளர் மலைச்சாமி, சி.ஐ.டி.யு., தாலுகா தலைவர் மணவாளன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கிளை துணைத் தலைவர் அருணாசலம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி