உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உறுப்பு தானத்திற்கு அரசு மரியாதை

உறுப்பு தானத்திற்கு அரசு மரியாதை

மேலுார்: வடக்கு நாவினிபட்டியைச் சேர்ந்தவர் கெவின் 21. மதுரையில் சமூக அறிவியல் கல்லுாரியில் ஆங்கிலம் மூன்றாம் ஆண்டு மாணவர். இவர் சிலநாட்களுக்கு முன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதில் அவர் மூளைச்சாவு நிலையை அடைந்தார். குடும்பத்தினர் மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் அவரது இரண்டு சிறுநீரகங்கள், நுரையீரலை தானம் செய்தனர். இதையடுத்து நேற்று மேலுார் ஆர்.டி.ஓ., ஜெயந்தி தலைமையில் ஆர்.ஐ., சரவணக்குமார், வருவாய் துறையினர், கெவின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ