கழுத்தை அறுத்து கொலை செய்த 4 பேருக்கு குண்டாஸ்
பேரையூர்:டி.கல்லுப்பட்டி அருகே நடந்த கொலை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.டி.கல்லுப்பட்டி பிள்ளைமார் தெரு முருகேசன் மகன் மணி. இவரிடம் மங்கம்மாள்பட்டி ராஜசேகர் 33, டூவீலரை அடமானமாக வைத்து ரூ.25 ஆயிரம் பெற்றுள்ளார். கடந்த ஜனவரியில் ரூ.25 ஆயிரத்தை மணியிடம் ராஜசேகர் கொடுத்து அடமானமாக வைத்த டூவீலரை திருப்பினார். கொடுத்த பணத்திற்கு வட்டியாக ரூ.ஆயிரம் தரும்படி மணி கேட்டதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.இந்நிலையில் ஜன.,25ல் மணி, அவரது நண்பர்கள் சரவணன், சங்கர், பூமர்சரவணன் ஆகியோர் டி.கல்லுப்பட்டி- -பேரையூர் ரோடு தனியார் மதுபான கூட்டத்திற்கு வந்து ராஜசேகர் மற்றும் பென்னியிடம் 27, தகராறு செய்து அரிவாளால் வெட்டினர். இதில் இருவரும் லேசான காயம் அடைந்தனர்.இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சமாதானம் செய்து கொள்வதாக ராஜசேகர், மணியின் தந்தை முருகேசனிடம் தெரிவித்தார். இதையடுத்து மங்கம்மாள்பட்டி சுடுகாடு அருகே ராஜசேகரன் முருகேசனை அழைத்துச்சென்றார். அங்கு முருகேசன், ராஜசேகர், பென்னி மற்றும் மூவர் மது அருந்தினர்.மது போதையில் தகராறு ஏற்பட்டு முருகேசன் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு உடலை சுடுகாட்டிலும் தலையை டி.கல்லுப்பட்டி டாஸ்மாக் பாரில் போட்டுவிட்டு மற்றவர்கள் தப்பி சென்றனர்.இது தொடர்பாக ராஜசேகர், பென்னி, விருதுநகர் மாவட்டம் வடமலைக்குறிச்சி விஜய் 25, குச்சம்பட்டி செல்வபாண்டி 25, ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதையடுத்து குண்டர் சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.