உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்ய வந்த மாற்றுத்திறனாளி பெண்ணை அவமதித்ததை கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் வீரமணி தலைமை வகித்தார். செயலாளர் பாலமுருகன் வரவேற்றார். இணைச் செயலாளர் குமரவேல் ஒருங்கிணைத்தார்.தடையை மீறி கோயிலுக்கு செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கோயில் உதவிகமிஷனர் யக்ஞ நாராயணன், போலீஸ் உதவிகமிஷனர் நாகராஜன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைதொடர்ந்து கோயில் இணைகமிஷனர் கிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவமதித்த பட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். செயற்கை காலை அகற்றுமாறு கூறிய போலீசார் இடமாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் பேட்டரி கார்கள், வீல் சேர் மூலம் சுவாமி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ