உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உன் சமையல் அறையில்...: மதுரையில் குழாய் மூலம் காஸ் விநியோகம்

உன் சமையல் அறையில்...: மதுரையில் குழாய் மூலம் காஸ் விநியோகம்

மதுரை : 'மதுரையில் 3 ஆண்டுகளில் குழாய் வழியாக வீடுகளுக்கு காஸ் விநியோகிக்கப்படும்' என கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.மதுரை பாத்திமா கல்லுாரியில் எல்.பி.ஜி., வாயு குறித்த கருத்தரங்கு நடந்தது. மதுரை இண்டேன் மண்டல பொதுமேலாளர் பிரேமா, இண்டியன் ஆயில் கார்ப்பரேஷன் மேலாளர் சம்பத்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.பிரேமா பேசியதாவது: தமிழகத்தில் மதுரை, சென்னை, கோவை, திருச்சியில் மண்டல அலுவலகங்கள் உள்ளன.பூமியின் மேலோட்டத்திலிருந்து எடுக்கப்பட்ட பெட்ரோலியம் தான் படிம எரிபொருட்கள். பூமியில் இருந்து கச்சா எண்ணெய்யை எடுத்து அதிலிருந்து பெட்ரோலியம் தொடர்பான பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இதற்காக இந்தியாவில் 23 சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. அதில் 11 நிலையங்கள் இண்டியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு சொந்தமானது. எல்.பி.ஜி., வாயு பெட்ரோலியத்திற்கு நேரடி தொடர்பு இல்லை.அது புரொப்பேன் பியூட்டேனின் கலவையாகும். இதை தவிர சி.என்.ஜி., எல்.என்.ஜி., வாயுக்கள் நிலையற்ற தன்மை கொண்டவையாக இருப்பதால் அவை சமையலுக்கு பயன்படுத்தபடாதவை.பெட்ரோலியம் பொருட்கள் இயற்கையை மாசுபடுத்துவதால் அதற்கு மாற்றாக ஹைட்ரஜன் பயன்படுத்தப்படும். இம்முறை 2047ம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் எரிவாயு உற்பத்தி செய்வதில் நம் நாடு 20வது இடத்திலும் பயன்படுத்துதலில் அமெரிக்கா, ரஷ்யாவை அடுத்து 3வது இடத்தில் நாம் உள்ளோம். நம்மிடம் போதுமான எரிவாயு பொருட்கள் இல்லாததால் ரஷ்யா, ஈரான், ஈராக்கில் இருந்து இறக்குமதி செய்யும் நிலையுள்ளது. விபத்துக்கள் நம் கவனக்குறைவாலும் அறியாமையாலும் நடக்கிறது என்றார். வேதியியல் துறைத் தலைவர் சுகுமாரி உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ