உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையை சேர்க்க வலியுறுத்தல்

மதுரையை சேர்க்க வலியுறுத்தல்

திருப்பரங்குன்றம்: காமராஜ் மக்கள் கட்சி மாநில முதன்மை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர் அய்யல்ராஜ் கூறியதாவது: ஆசியான் என்ற ஒருமித்த விமான போக்குவரத்து சந்தைக்கு இந்திய சிவில் விமான போக்குவரத்து துறை பரிந்துரைத்த 18 சுற்றுலா நகரங்களில் தமிழகத்தில் திருச்சி மட்டுமே இடம்பெற்றுள்ளது. மதுரை இடம்பெறவில்லை. இடம்பெற்றால் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள 10 நாடுகளுக்கும் சுற்றுலா பயணியர் சென்றுவர கூடுதலாக விமான சேவை கிடைக்கும். இத்திட்டத்தில் மதுரையை இணைக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ