மேலும் செய்திகள்
விநாயகர் ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்க தடை
05-Sep-2024
திருநெல்வேலி : ல்லையில் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை துவக்கி வைத்து மதுரை ஆதினம் பேசியதாவது:நாம் பாரத நாட்டில் பிறந்தது புண்ணியம், தமிழகத்தில் பிறந்தது அதை விட புண்ணியம், நெல்லையில் பிறந்து, வாழ்வது மகா புண்ணியம். ஞானசம்பந்தரால் பாடப்பட்ட பெருமை திருநெல்வேலிக்கு உண்டு. நம் சமயத்தில் தான் ஆண்டு முழுவதும் விழாக்கள் நடக்கிறது. நான் நெல்லை மண்ணைச் சேர்ந்தவன்.ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, திலகர் விநாயகர் சிலை ஊர்வலத்தை நடத்தினார். சர்ச்சுகள், மசூதிகளில் அந்தந்த மதத்தினர் கலந்து பேசி தேர்தலில் ஓட்டு அளிக்கின்றனர். இந்து மதத்தினர் அப்படி செய்வதில்லை. கோவில் நிலங்களின் குத்தகைப் பாக்கித்தொகை நிலுவையை வசூலிப்பது குறித்து அமைச்சரிடம் கூறினேன். அவர் பதில் கூறவில்லை. சட்டம் - ஒழுங்கு மீறல் வேதனை அளிக்கிறது. போலீஸ் அதிகாரி மீது தாக்குதல் நடக்கிறது. மக்களுக்கு யார் பாதுகாப்பு. மது குடிக்காதீர்கள், சிகரெட் புகைக்காதீர்கள். சமயத்தைப் பாதுகாக்க உங்களிடம் ஒன்று உள்ளது. அதை பயன்படுத்துங்கள். தினமும் கோயிலுக்கு செல்லுங்கள். திருநீறு அணியுங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.
05-Sep-2024