உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை டூ மலேசியா பறக்கும் சுவாமி பொம்மை

மதுரை டூ மலேசியா பறக்கும் சுவாமி பொம்மை

திருநகர் : விளாச்சேரி பொம்மை கலைஞர்களின் கைவண்ணத்தில் மதுரை மண்ணில் தயாரான சுவாமி பொம்மைகள் துபாய், அமெரிக்கா, மலேசியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.சோமு கூறியதாவது: 50 ஆண்டுகளுக்கு மேலாக குடும்பத்துடன் இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். 10 ஆண்டுகளாக சுவாமி பொம்மைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி வருகிறோம். வெளிநாட்டில் உள்ளவர்கள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாதவாறு களிமண்ணில் தயாரித்து வாட்டர் பெயின்ட் அடிக்கப்படும் சுவாமி பொம்மைகளை விரும்பி வாங்குகின்றனர்.விநாயகர், துளசி மாடம், விதைப் பிள்ளையார், நவராத்திரி கொலு பொம்மைகள், அஷ்டலட்சுமி உள்பட அனைத்து சுவாமி பொம்மைகளையும் விரும்பி வாங்குகின்றனர். பூஜை அறையில் வைத்து கும்பிட எனாமல் பெயின்ட் அடித்த பொம்மைகளை வழங்குகிறோம். வெளிநாடுகளுக்கு தேவைப்படும் பொம்மைகளை ஜனவரியில் தயாரிக்க துவங்கி ஜூலையில் அனுப்புவோம். மற்ற மாதங்களில் தென்மாநிலங்களுக்கு அனுப்ப பொம்மைகள் தயாரிக்கிறோம். வெளிநாடுகளில் நமது சுவாமி பொம்மைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அவற்றை தயாரிப்பதில் பெருமை அடைகிறோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை