உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாசி உற்ஸவ தேரோட்டம்

மாசி உற்ஸவ தேரோட்டம்

திருமங்கலம்: திருமங்கலம் உச்சப்பட்டி ஞானாம்பிகை ஞானபுரீஸ்வரர், ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள், அத்திவரதர், பதினெட்டாம்படி கருப்பசாமி கோயிலில் மாசி உற்ஸவ திருவிழா நடந்தது. ஆறு நாட்கள் நடந்த திருவிழாவில் நேற்று முன்தினம் இரவு தேரோட்டம் நடந்தது. சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு தேரில் பவனி வந்தனர். உச்சம்பட்டி, துணைக்கோள் நகரம், கப்பலுார் காலனி வழியாக தேரோட்டம் சென்று கோயிலை வந்தடைந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர். அன்னதானத்தை கோயில் நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், முத்துமீனா, தே.மு.தி.க., ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன், விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ