ஆடவர் வாலிபால், மகளிர் எறிபந்து
மதுரை: மதுரை லேடிடோக் கல்லுாரியில் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கான மாநில அளவிலான ஆடவர் வாலிபால், மகளிர் எறிபந்து போட்டிகள் நடந்தன. ஆடவர் வாலிபால் போட்டியில் 9 அணிகள் பங்கேற்றன. சிவகாசி அஞ்சா கல்லுாரி 5வது முறையாக முதலிடத்தைத் தட்டிச் சென்றது.மதுரை காமராஜ் பல்கலை இரண்டாமிடம், லேடிடோக் கல்லுாரி மூன்றாமிடம், கருமாத்துார் அருளானந்தர் கல்லுாரி நான்காம் இடம் பெற்றன. பெண்களுக்கான எறிபந்து போட்டியில் 5 அணிகள் பங்கேற்றன. லேடிடோக் கல்லுாரி முதலிடம் பெற்றது.பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி இரண்டாமிடம், அமெரிக்கன் கல்லுாரி மூன்றாமிடம், வே.வே. வன்னியப்பெருமாள் கல்லுாரி நான்காம் இடம் பெற்றன. தேசிய மாணவர் படையின் கடற்படை பிரிவு அதிகாரி பிரதீப் பிரேம் குமார், பல்கலை உடற்கல்வி துறைத் தலைவர் ரமேஷ், தங்கமயில் ஜூவல்லர்ஸ் பொதுமேலாளர் சைலஜா பிரசன்னா, முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ, முன்னாள் முதல்வர் கிறிஸ்டியானா சிங் ஆகியோர் கலந்துகொண்டனர்.உடற்கல்வி இயக்குநர் சாந்தமீனா ஏற்பாடுகளை செய்திருந்தார்.