உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தமிழக கல்வித்துறையில் மத்திய அரசு நிதி ரூ.பல கோடி முறைகேடு

தமிழக கல்வித்துறையில் மத்திய அரசு நிதி ரூ.பல கோடி முறைகேடு

மதுரை : 'தமிழக கல்வித்துறைக்கு மத்திய அரசால் வழங்கப்படும் ஐ.சி.டி., (இன்பர்மேஷன் கம்யூனிகேஷன் டெக்னாலஜி) நிதி தவறாக பயன்படுத்தப்படுகிறது. இதனால் 60 ஆயிரம் கணினி பட்டதாரிகளின் வேலை வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது,' என, தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லாத பட்டதாரிகள் சங்கம் குற்றச்சாட்டியுள்ளது.மதுரையில் இச்சங்க மாநில தலைவர் சசிக்குமார், பொது செயலாளர் குமரேசன் கூறியதாவது:மத்திய அரசு சார்பில் அனைத்து மாநிலங்களுக்கும் மாணவர்களுக்கு 'ஹைடெக் லேப்'கள் அமைக்கவும், கணினி அறிவியல் பாடம் கற்பிக்கவும், அதற்காக கணினி பயிற்சியாளர் (கம்ப்யூட்டர் இன்ஸ்ட்ரக்டர்) நியமிக்கவும் 'சமக்ர சிக் ஷா திட்டம்' (ஒருங்கிணைந்த கல்வித்திட்டம்) மூலம் ஐ.சி.டி., நிதி ரூ.பல கோடிகள் ஒதுக்கப்படுகிறது. இந்நிதியை பயன்படுத்துவதில் மத்திய அரசின் வழிகாட்டுலை தமிழக கல்வித்துறை பின்பற்றவில்லை.தற்போது தமிழக அரசு நடுநிலைப் பள்ளிகளில் 'ஹைடெக் லேப்'கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அதில் பணியாற்ற 'அட்மினிஸ்ட்ரேட்டர் கம் இன்ஸ்ட்ரக்டர்' என்ற பணியிடங்களை உருவாக்கி இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்றிய 6 ஆயிரத்து 890 பேர் நியமிக்கப்பட்டனர். இதில் பி.எட்., கம்ப்யூட்டர் படித்தவர்கள் 200 பேர் மட்டுமே.இப்பணியிடத்தில் நியமிக்க தகுதி பெற்றவர்கள் பி.எட்., கணினி அறிவியல் படித்தவர்களே. அவ்வகையில் 60 ஆயிரம் பேர் 15 ஆண்டுகளாக வேலைவாய்ப்புக்கு காத்திருக்கின்றனர். ஆனால் மூன்று, ஆறு மாதங்கள் கணினி பயிற்சி முடித்த இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலர்களை தனியார் நிறுவனம் ஒன்று தேர்வு வைத்து நியமித்துள்ளது. இது முற்றிலும் மத்திய அரசின் வழிகாட்டுதல் முறைக்கு எதிரானது.ஐ.சி.டி., நிதியில் ஒரு பள்ளியின் 'இன்ஸ்ட்ரக்டர்' பணிக்கு மாதம் ரூ.15 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளனர். ஆனால் தமிழகத்தில் 'அட்மினிஸ்டேட்டர் கம் இன்ஸ்ட்ரக்டர்' பணிக்கு மாதம் ரூ.11 ஆயிரத்து 452 என குறைவாக சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மேலும் ஐ.சி.டி., நிதியில் 'ஹைடெக் லேப்'கள் ஏற்படுத்துவது, அவற்றை பராமரிப்பது, ஸ்மார்ட் வகுப்பறைகள், ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்குவது என ரூ.ஆயிரத்து 76 கோடி பணிகளுக்கு தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் விடுவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசே எடுத்து நடத்த வேண்டிய இந்த ஐ.சி.டி., நிதிப் பணிகளை தனியார் நிறுவனத்திற்கு ஏன் வழங்க வேண்டும். தமிழக அரசுக்கு ஒதுக்கப்படும் ஐ.சி.டி., நிதி ரூ.பல கோடியை முறையாக பயன்படுத்துகின்றனரா என்பதை ஆய்வு செய்ய மத்திய அரசு சிறப்பு குழுவை அமைத்து கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

சமூக நல விரும்பி
ஆக 12, 2024 23:00

கல்வி தான் அழியா செல்வம் என்று கூறும் திமுக அதை தான் திருடுகிறது


R.MURALIKRISHNAN
ஆக 12, 2024 22:21

தனியாருக்கு கொடுத்தால் தான் 40% கமிஷன் கிடைக்கும். கழக அரசு கிடையாது இது கமிஷன் அரசு


xyzabc
ஆக 12, 2024 08:26

கணக்கு கேட்க கூடாது. கணக்கு என்பது திராவிட மாடல் பண்பு அல்ல .


Rajarajan
ஆக 12, 2024 07:20

உங்களை அரசு ஊழியரா நியமிச்சா மட்டும் என்ன பண்ணுவீங்க? உடனே கொடி, கோஷம், ஊர்வலம், உண்ணாவிரதம், போராட்டம்னு ஆரம்பிப்பீங்க. எப்போ பாத்தாலும் முப்பது அம்ச கோரிக்கைனு அங்க அங்க பந்தல் போட்டு ஒக்காந்துருவீங்க. எவ்வளவு சம்பளம் தந்தாலும், விடுமுறை தந்தாலும் உங்களுக்கு போதவே போதாது. அரசோட கஜானாவையே தந்தாலும், வருடம் முழுசும் விடுமுறை தந்தாலும், அரசு ஊழியருக்கு போதவே போதாது. ஆனால் உங்க வாரிசுகளை மட்டும் தனியார் பள்ளிகள்ல சேர்த்து படிக்கவெச்சி, அவங்க எதிர்காலம் பாதிக்க படாம பாத்துப்பீங்க. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர் மட்டும் பாதிக்கப்பட்டா பரவாயில்லையா ?? நல்லா இருக்கு உங்க நியாயம். ஏன், தனியார் பள்ளிகளில் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் வாழ்க்கையில் வாழவே இல்லையா? முன்னேறவே இல்லாயா? இல்லை எதிர் நீச்சல் போடலையா? மொதல்ல, அரசு பள்ளிகளின் தர கட்டுப்பாட்டை, தனியார் குழுக்களிடம் ஒப்படைக்க வேண்டும். அரசு நிர்வாகத்தின் பொறுப்பை அத்தியாவசத்தை தவிர, பெருமளவு ஒழித்துக்கட்ட வேண்டும்.


மேலும் செய்திகள்





புதிய வீடியோ