உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பருவமழைக்கால ஆலோசனை கூட்டம்

பருவமழைக்கால ஆலோசனை கூட்டம்

மதுரை: மதுரையில் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் பருவமழை காலத்தில் இயற்கை இடர்பாடுகளை தவிர்க்கும் நோக்கில் அனைத்துத் துறை அலுவலர்களுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடந்தது. கலெக்டர் சங்கீதா தலைமை வகித்தார். கூடுதல் கலெக்டர் மோனிகா ராணா, பயிற்சி கலெக்டர் வைஷ்ணவி பால், டி.ஆர்.ஓ., சக்திவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில் குளம், கண்மாய் உட்பட நீர்நிலைகளின் கரைகள் உறுதியாக உள்ளதா என பரிசோதனை செய்ய வேணடும். மழைநீர் கால்வாய்களை துார்வாரி வைத்துக் கொள்ள வேண்டும். சுகாதாரத் துறை சார்பில் தொற்று நோய் தடுப்பு மருந்துகள் போதுமான அளவில் இருப்பு வைக்க வேண்டும். நெடுஞ்சாலைத் துறை சார்பில் மரம் அறுக்கும் கருவி உட்பட உபகரணங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும்.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் அரிசி, பருப்பு உட்பட அத்தியாவசிய பொருட்களை போதுமான அளவில் இருப்பு வைக்க வேண்டும் என்பது போன்ற ஆலோசனைகளை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை