மேலும் செய்திகள்
விஜய்யிடம் கேளுங்கள் டென்ஷனான அண்ணாமலை
7 hour(s) ago
அதிக வெப்பத்தால் மதுரை வானில் வட்டமடித்த விமானம்
7 hour(s) ago
போலீஸ் செய்திகள்...
9 hour(s) ago
தினமலர் செய்தியால் தீர்வு வகுப்பறைகள் கட்ட பூமிபூஜை
9 hour(s) ago
மதுரை: மதுரை ஜி.எம்.எஸ். பவுண்டேஷன், தியாகம் அறக்கட்டளை, நல்லோர் குழு, மாற்றுத்திறனாளிகள் அமைப்பு சார்பில் ஜூன் 29, 30ல் மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு, கலை, கலாசார போட்டிகள் நடத்தப்படுகின்றன.பவுண்டேஷன் நிறுவனர் ராஜகுமாரி கூறியதாவது: ஆட்டிசம், செவித்திறன், அறிவுசார் குறைபாடுடையோர், மூளை முடக்குவாதம், முதுகுத்தண்டுவட பாதிப்படைந்தோர், பார்வை மாற்றுத்திறனாளிகள், சக்கர நாற்காலி பயன்படுத்துவோரை சமுதாயத்தில் ஒன்றிணைக்க வேண்டும் என்பதற்காக இந்த முயற்சி எடுத்துள்ளோம்.இதுபோன்ற குறைபாடுடையவர்களை ஒருங்கிணைத்து அவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்துவது சவாலான விஷயம்.நடனம், பாட்டு, இசைக்கருவிகள் இசைத்தல், கேரம், செஸ் விளையாட்டு போட்டி, சிறுகதை கூறுதல், போட்டோ எடுத்தல், காமெடி டிராக், குறும்படம் மற்றும் யோகா போட்டிகள் நடத்தப்படுகின்றன. 13 முதல் 19 வயதினர், அதற்கு மேற்பட்டோர் என 2 பிரிவுகளில் பங்கேற்கலாம். அனுமதி கட்டணம் இல்லை. பங்கேற்பாளர்களுக்கு உணவு, வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும். முன்பதிவுக்கு 93677 57775ல் தொடர்பு கொள்ளலாம் என்றார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் விஜயதர்ஷன், ரெபாதேவி, விசாலாட்சி, அமுதசாந்தி, ரவி, பூபதி உடனிருந்தனர்.
7 hour(s) ago
7 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago