உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / முத்தாலம்மன் கோயில் விழா

முத்தாலம்மன் கோயில் விழா

வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே செல்வக்குளம் முத்தாலம்மன் கோயில் விழா ஜூன் 25ல் சாமி சாட்டுதலுடன் துவங்கியது. ஜூன் 28 விநாயகருக்கு பொங்கல் வைத்து வழிபாடு, 29ல் அடைக்கலம் காத்த அய்யனாருக்கு குதிரை எடுத்து பூவாயி அம்மன் மற்றும் பரிகார தெய்வங்களுக்கு பொங்கல் வைத்து அபிஷேகம் செய்து கருப்புசாமிக்கு கிடா வெட்டினர்.ஜூன் 30 மவுனகுரு சுவாமி மடத்தில் பொங்கல் வைத்தனர். ஜூலை 1 அம்மன் கோயிலுக்கு மாவிளக்கு எடுத்தும் பொங்கல் வைத்தனர். நேற்று முளைப்பாரி, அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று (ஜூலை 4) காலை அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி, அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கிராம தலைவர், முதன்மைக்காரர்கள் மற்றும் கிராமத்தினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை