உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தொழில்முனைவோரை உருவாக்கும் ‘நீட்ஸ்’ திட்டம்

தொழில்முனைவோரை உருவாக்கும் ‘நீட்ஸ்’ திட்டம்

மதுரை: புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் (நீட்ஸ்) கீழ் முதல் தலைமுறை தொழில்முனைவோருக்கு கடன், மானியம் வழங்கப்படுகிறது. மதுரை மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கணேசன் கூறியதாவது: குடும்பத்தில் முதல்முறையாக தொழில் துவங்குவோருக்கு மட்டும் நீட்ஸ் திட்டத்தில் அனுமதி உண்டு. குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.5 கோடி வரை உற்பத்தித் தொழில் அல்லது சேவைத்தொழில்கள் தொடங்கலாம். பிளஸ் 2, அதற்கு மேல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப்பிரிவு ஆண்கள் 45 வயதுக்குள்ளும், மற்ற பிரிவினர், பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் 55 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு இல்லை. விண்ணப்பதாரர் தமிழகத்தில் மூன்றாண்டுகள் வசிப்பராக இருக்க வேண்டும். 25 சதவீத மானியம் வீதம் அதிகபட்சமாக ரூ.75 லட்சம் வரை மானியமாக பெறலாம். அதற்கு 3 சதவீதம் பின்முனை வட்டி மானியம் வழங்கப்படும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர், மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 10 சதவீத மானியம் உண்டு. கடன் திட்ட மதிப்பீட்டில் 10 சதவீத முதலீடு பொதுப்பிரிவு ஆண்கள் ஏற்கவேண்டும். மற்றவர்களுக்கு 5 சதவீத முதலீடு இருந்தால் போதும். அரசால் அங்கீகரிக்கப்படாத தகுதியில்லாத தொழில்களுக்கு அனுமதியில்லை. வங்கிகளில் கடன் அனுமதி பெற்றால் ஆன்லைன் மூலம் 10 நாட்கள் தொழில்முனைவோர் பயிற்சி அளிக்கப்படும் என்றார். விருப்பமுள்ளவர்கள் www.msmeonline.tn.gov.inஇணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட தொழில் மையத்தை அணுகலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை