மேலும் செய்திகள்
கரும்பு தோட்டத்தில் கொத்தடிமைகள் மீட்பு
31-Jan-2025
உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் பேரையூருக்கு தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு வெட்டும் பணிக்கு மத்தியப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த 15 பேர் வந்துள்ளனர். அவர்களுக்கு உரிய சம்பளம் கொடுக்கவில்லை என சாப்டூர் போலிஸ் ஸ்டேஷனில் சில நாட்களுக்கு முன் புகார் செய்தனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து பணிக்குச் சென்றனர்.அந்த குழுவில் இருந்த 10 பேர் ஊருக்குச் சென்றுவிட்டனர். மீதம் இருந்த ரங்குசிங் 65, ராம்பிரசாத் 62, மனைவி புட்டலியா 57, முன்னி 62, மொகர்சிங் 35, டி.ராமநாதபுரம் போலீசில் தஞ்சமடைந்தனர். பேரையூர் தாசில்தார் செல்லப்பாண்டி, எழுமலை இன்ஸ்பெக்டர் சுப்பையா நடத்திய விசாரணையில் உரிய சம்பளம் கொடுக்கவில்லை. உணவுக்கு வழியில்லை எனத் தெரிவித்தனர்.தனியார் சர்க்கரை ஆலை பணியாளர்கள், வடமாநிலத்தில் இருந்து அழைத்து வந்த ஏஜன்ட்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். தாங்கள் அவர்களுக்கு ஏற்கனவே முன்பணம் கொடுத்துள்ளதாகவும், உணவுக்கு பொருட்கள் வாங்கிக் கொடுத்து வருவதாகவும் தெரிவித்தனர். இருந்த போதும் மீண்டும் பணிக்குச் செல்ல 5 பேரும் விருப்பமில்லை எனத் தெரிவித்ததால், அதிகாரிகள் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
31-Jan-2025