உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பழைய சிக்கன் ஓட்டலுக்கு சீல்

பழைய சிக்கன் ஓட்டலுக்கு சீல்

மதுரை: மதுரை ரிசர்வ் லைனில் 'ஐபக் ஓட்டலில் முதல்நாள் சமைத்த உணவு மற்றும் சிக்கனை 'ப்ரீசரில்' வைத்திருந்ததால் உணவுப்பாதுகாப்புத்துறையினர் பறிமுதல் செய்து ஓட்டல் உரிமத்தை ரத்து செய்தனர்.இந்த ஓட்டலில் உணவு சாப்பிட்ட 4 பேர் வாந்தி, வயிற்றுப்போக்கால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உணவுப்பாதுகாப்புத்துறையின் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு புகார் அனுப்பினர். துறையின் மாவட்ட நியமன அலுவலர் ஜெயராமபாண்டியன் தலைமையில் அந்த ஓட்டலை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அங்கு 'ப்ரீசரில்' முதல்நாள் சமைத்த உணவு மற்றும் சிக்கன் வைக்கப்பட்டிருந்ததை பறிமுதல் செய்து அழித்தனர்.ஜெயராமபாண்டியன் கூறியதாவது: உணவு மாதிரிகளை ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளோம். ஓட்டல் சுகாதாரமின்றி இருந்ததால் அபராதம் விதிக்கப்பட்டதோடு உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து கடைக்கு 'சீல்' வைக்கப்பட்டது. உணவுப்பாதுகாப்புத்துறைக்கான புகார் செயலி மூலம் மாதம் 15 புகார்களும் வாட்ஸ்ஆப் மூலமாக 30 புகார் பெறுகிறோம். ஓட்டல் மட்டுமின்றி ரோட்டு கடை, உணவகம், பேக்கரி என உணவு சார்ந்த எந்த புகார்களையும் வாட்ஸ்ஆப்பில் (94440 42322) தெரிவிக்கலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி