ஒரு போன் போதுமே....
துர்நாற்றத்தில் ஊருணிமதுரை புது நத்தம் ரோட்டிலிருந்து நாகனாகுளம் செல்லும் வழியிலுள்ள ஊருணியில் கழிவுநீர் கலந்து பச்சை நிறத்திற்கு மாறியுள்ளதுடன் துர்நாற்றமும் வீசுகிறது. ஊருணியை துார்வாரி முறையாக பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-எஸ்.பாலன், நாகனாகுளம்.ரோட்டில் கழிவுநீர்மதுரை பீ.பி.குளம் ஐந்து முனை சந்திப்பு அருகே ஓட்டல், நடைபாதை கடைகளில் சேரும் கழிவு நீரை இரவு 11:00 மணிக்கு பிறகு ரோட்டில் கொட்டுகின்றனர். இதனால் ரோடு விரைந்து சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறி, சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பிரியா, பீ.பி.குளம்.கழிவுநீரால் அவதிமதுரை ரயில்வே கர்டர் பாலம் - கனகவேல்காலனி செல்லும் ராஜா மில் ரோட்டிலுள்ள தொட்டியில் குப்பை முறையாக அள்ளப்படாமல் ரோட்டில் சிதறி கிடக்கிறது. அருகில் கழிவுநீர் வெளியேறி ரோட்டில் ஓடுவதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-எஸ்.ராஜன், கனகவேல்காலனி.9 பேரை கடித்த நாய்மதுரை ஹார்விபட்டியில் சில நாட்களாக வெறி நாய் ரோட்டில் செல்வோரை கடித்து வருகிறது. இதுவரை 9 பேரை நாய் கடித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்க வில்லை. பெண்கள், குழந்தைகள் அச்சத்திலேயே உள்ளனர்.-எஸ்.ஏ.ராஜசேகர், ஹார்விபட்டி.ஆக்கிரமிப்பு அவதிமதுரை வருமான வரித்துறை அலுவலகம் முதல் உழவர்சந்தை வரை ரோட்டோரம் வர்த்தக நிறுவனங்கள், நடைபாதை வியாபாரிகள், தள்ளுவண்டிகளால் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. சென்டர்மீடியனால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. ரோட்டோர ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்ற வேண்டும்.-நித்யா, பனங்காடி.