உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆன்லைன் கட்டட வரைபட அனுமதி; : 10 சதவீத ஆய்வு போதுமா மாநகராட்சி அதிகாரிகள் அதிர்ச்சி

ஆன்லைன் கட்டட வரைபட அனுமதி; : 10 சதவீத ஆய்வு போதுமா மாநகராட்சி அதிகாரிகள் அதிர்ச்சி

மதுரை: தமிழகத்தில் வீடு கட்ட ஆன்லைன் முறையில் உடனடி கட்டட வரைபட அனுமதி பெறும் திட்டத்தில் மாநகராட்சி பகுதியில் 10 சதவீதம் விண்ணப்பங்களை ஆய்வு செய்தால் போதும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் அதிக முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது என அதிகாரிகள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.வீடு கட்ட ஆன்லைன் முறையில் உடனடி கட்டட வரைபட அனுமதி பெறும் திட்டத்தை ஜூலை 23 ல் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இதன்படி 3500 சதுர அடிக்குள் குடியிருப்பு கட்டடம் (ஜி பிளஸ் 1) விண்ணப்பதாரரே சுயசான்று அளித்துக்கொள்கின்றனர். இதுதொடர்பாக இணையதளத்தில் விண்ணப்பித்தால் ஒற்றைசாளர முறையில் உடன் அனுமதி அளிக்கப்படுகிறது. தற்போது மாநில அளவில் இதுபோன்ற சுயசான்று பெற்று அனுமதிக்கப்பட்ட விண்ணப்பங்களில் மாநகராட்சிகள் பகுதியில் 10 சதவீதம் மனுக்களின் உண்மை தன்மையை ஆய்வு செய்ய நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவிட்டுள்ளது. மீதமுள்ள 90 சதவீதம் மனுக்களை என்ன செய்ய வேண்டும் என்ற வழிகாட்டுதல் இல்லை என அதிகாரிகள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.அவர்கள் கூறியதாவது: கட்டட வரைபட அனுமதி பெற நேடியாக விண்ணப்பிக்கும் போது பத்திரம், பட்டா, மூலப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் முழு ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அனுமதி வழங்கும் முன் அந்த விண்ணப்பதாரர் சொத்துவரி உள்ளிட்ட வரி நிலுவைகள் வசூல் செய்யப்படும். கட்டட வரைபடம் தொடர்பான பொறியாளர்கள் விவரம் தெளிவாக ஆய்வு செய்யப்படும். தவறு இருந்தால் அதை திருத்துவதற்கு வாய்ப்பளிக்கப்படும். ஆனால் தற்போது புதிய கட்டடத்துக்கான வரைபடத்தை 'அப்லோடு' செய்தாலே அனுமதி கிடைத்துவிடுகிறது. சிலர் அந்த அனுமதியை வைத்து வங்கி கடன் பெற விண்ணப்பித்துள்ளனர்.முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில், இத்திட்டத்தில் அந்தந்த மாநகராட்சியில் 'ரேண்டமாக' 10 சதவீதம் மனுக்களை மட்டும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.பிற 90 சதவீதம் மனுக்களின் உண்மை தன்மை எவ்வாறு இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆன்லைன் அனுமதிக்கு பின் களஆய்வு உள்ளிட்ட நடைமுறையை தீவிரபடுத்தினால் முறைகேடுகளை தவிர்க்கலாம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Malar Xerox
செப் 03, 2024 11:11

அனைத்தையும் ஆய்வு செய்தால் தானே அவர்களிடம் இருந்து பணம் பறிக்க முடியும். லஞ்சம் தலைவிரித்தாடுகிறது மதுரை மாநகராட்சி.


முக்கிய வீடியோ