சிப்பிக்காளான் உணவுத்திருவிழா
மதுரை: மதுரை ஏரன் அறக்கட்டளை சார்பில் மதுரையில் சிப்பிக்காளான் உணவுத் திருவிழா நடந்தது. உணவுகளை 50 பெண்கள் காட்சிப்படுத்தினர்.நபார்டு வங்கி உதவிப்பொது மேலாளர் சக்திபாலன், பேங்க் ஆப் இந்தியா முதுநிலை மேலாளர் வீரபாபு, முதன்மை மேலாளர் ராஜாபருவி ஆகியோர் உணவுத்தொழில் தொடங்குவதற்கான வங்கிக்கடன், மானியம் குறித்து ஆலோசனை வழங்கினர்.உணவுகளை ஐ.ஓ.பி., வங்கி மேலாளர் ராதா, தொழில் முனைவோர் சித்ரா மதிப்பீடு செய்தனர். அறக்கட்டளை நிறுவனர் ராஜேஷ் நல்லையா, செயலாளர் பூர்ணம், திட்டத் தலைவர் முனீஸ்வரன் ஒருங்கிணைத்தனர்.