உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பாரா ஒலிம்பிக் சங்க வலு துாக்கும் போட்டி

பாரா ஒலிம்பிக் சங்க வலு துாக்கும் போட்டி

மதுரை : மதுரை காந்தி மியூசியத்தில் தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் சங்கம் சார்பில்சீனியர், ஜூனியர் வலு துாக்கும் போட்டிகள் நடந்தன.மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, விடுதி காப்பாளர் முருகன், கைப்பந்து பயிற்சியாளர் குமரேசன் தலைமை வகித்தனர். தேனி ஆனந்தம் சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் செல்வராஜன், மாற்றுத் திறனாளி சங்க தலைவர் பூபதி துவக்கி வைத்தனர். 22 மாவட்டங்களைச் சேர்ந்த 130 வீரர்கள் பங்கேற்றனர். உடல் எடைக்கு ஏற்ப அதிக எடை துாக்குவோர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டனர்.பெண்கள் பிரிவில் நதியா 60 கிலோ எடை பிரிவில் அதிகபட்சம் 80 கிலோ, ஆண்கள் பிரிவில் கிருஷ்ண மூர்த்தி 53.5 கிலோ எடை பிரிவில் அதிகபட்சம் 140 கிலோ வலு துாக்கி முதலிடம் பெற்றனர். முதல் மூன்று வெற்றியாளர்களை தேசிய அளவில் நொய்டாவில் நடக்க உள்ள போட்டிக்கு தேர்வு செய்தனர்.உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சாமிதுரை, தென்புலம் அறக்கட்டளை மதன், பாலமுருகன் ஜூவல்லர்ஸ் பாலமுருகன், குரு கிருபா பள்ளித் தாளாளர் விக்னேஷ் பரிசு வழங்கினர். பயிற்சியாளர்கள் விஜய்சாரதி, ரஞ்சித்குமார் ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ