உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாசுபட்ட நீரை மனசின்றி பயன்படுத்தும் மக்கள்

மாசுபட்ட நீரை மனசின்றி பயன்படுத்தும் மக்கள்

கொட்டாம்பட்டி: கச்சிராயன்பட்டி, கே.புதுாரில் மேல்நிலை தொட்டியில் சிமென்ட் பூச்சு, துருப்பிடித்த கம்பிகள் பெயர்ந்து விழுந்து மாசுபட்ட நீரை பயன்படுத்தும் மக்களின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகி உள்ளது.கே.புதுாரில் வசிக்கும் 700 க்கும் மேற்பட்டோருக்கு 20 ஆண்டுகளுக்கு முன் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள மேல்நிலை தொட்டி கட்டப்பட்டுள்ளது. ஊராட்சி நிர்வாகம் இதில் போர்வெல், காவிரி நீரை நிரப்பி விநியோகம் செய்கிறது. இத் தொட்டியின் துாண்கள், மூடியின் உட்பகுதி சிதிலமடைந்துள்ளது.அப்பகுதியைச் சேர்ந்த அழகு கூறியதாவது: தொட்டியின் ஒரு துாணின் அடிப்பகுதியில் பெரிய அளவில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. அது சாய்ந்து விடாமல் இருக்க தற்காலிகமாக சிமென்ட் கலவையை பயன்படுத்தி மராமத்து செய்துள்ளோம். தொட்டி மூடியின் உள்பகுதியில் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து, கம்பிகள் துருப்பிடித்து தண்ணீருக்குள் உதிர்ந்து வருகிறது. பொது மக்களுக்கு வினியோகிக்கும் தண்ணீரில் துருபிடித்த இரும்புத் துகள் கலந்து வருவதால் மக்களின் ஆரோக்கியம் பாதிக்கும் நிலை உள்ளது. அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. தொட்டி உடைந்து உயிர்ப்பலி ஏற்படும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், நேரில் ஆய்வு செய்து சரி செய்யப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ