உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பட்டா மாறுதலுக்கு ரூ.6000 லஞ்சம் பேரையூர் பெண் வி.ஏ.ஓ., கைது

பட்டா மாறுதலுக்கு ரூ.6000 லஞ்சம் பேரையூர் பெண் வி.ஏ.ஓ., கைது

பேரையூர் : மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா சின்னாரெட்டிபட்டியில் பட்டா மாறுதலுக்கு ரூ.6000 லஞ்சம் வாங்கிய பெண் வி.ஏ.ஓ., மீனாட்சியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.சின்னாரெட்டிபட்டி வி.ஏ.ஓ., மீனாட்சி 47. திருப்பரங்குன்றம் தாலுகா வலையங்குளம் அருகே மக்காரம்பாறையைச் சேர்ந்தவர் மொகைதீன்ஷெரீப் 37. இவர் 2011 ல் தந்தை சர்தார், தாய் மதினா பெயரில் சின்னாரெட்டிபட்டியில் 2 பிளாட்டுகள் வாங்கினார். அப்போது பட்டா வாங்கவில்லை. இந்த பிளாட்டுகளுக்கு ஜூலை 15 ல் ஆன்லைன் மூலமாக உட்பிரிவு பட்டாவிற்கு விண்ணப்பித்தார். வி.ஏ.ஓ., மீனாட்சியை சந்தித்து ஆவணங்களையும் சமர்ப்பித்தார். மொகைதீன் ஷெரீபிடம் ஒரு பிளாட்டுக்கு ரூ.3 ஆயிரம் வீதம் 2 பிளாட்களுக்கு ரூ. 6000 வேண்டும் என மீனாட்சி கேட்டார்.'பார்ப்போம்,' எனகூறிச்சென்ற முகமது ஷெரீப்பை அலைபேசியில் அழைத்த மீனாட்சி, 'பணத்தை கொண்டு வாருங்கள், பட்டா மாறுதல் செய்வதற்கு' என்றார். மொகைதீன் ஷெரீப் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.அவர்கள் யோசனைப்படி நேற்று மதியம் ரசாயனம் தடவிய ரூ. 6000 நோட்டுகளை சின்னாரெட்டிபட்டி வி.ஏ.ஓ., அலுவலகத்தில் மீனாட்சியிடம் கொடுத்தார். மீனாட்சியை டி.எஸ்.பி., சத்தியசீலன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பாரதிபிரியா, ரமேஷ்பிரபு, சூரியகலா ஆகியோர் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை