உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

கோயிலில் திருட்டு

மதுரை: புதுநத்தம் ரோட்டில் எஸ்.பி., பங்களா அருகே விநாயகர் கோயில், ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் உள்ளது. இக்கோயிலின் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்து பணத்தை மர்மநபர் திருடிச் சென்றார். கண்காணிப்பு கேமராவையும் உடைத்துள்ளார். தல்லாகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.

உதவி தலைமை ஆசிரியர் மர்ம சாவு

திருமங்கலம்: மம்சாபுரம் பரமேஸ்வரன் 55. விருதுநகர் தனியார் பள்ளி உதவி தலைமை ஆசிரியர். பூர்வீக சொத்து பிரிப்பு தொடர்பாக உடன் பிறந்தவர்களோடு பிரச்னை ஏற்பட்டது. நேற்று முன்தினம் மாலை உசிலம்பட்டி தாலுகா போலீஸ் ஸ்டேஷனுக்கு பேச்சு வார்த்தைக்கு சென்றுவிட்டு இரவு 10:00 மணிக்கு டூவீலரில் கிளம்பியவர் வீடு திரும்பவில்லை.நேற்று காலை உசிலம்பட்டி - திருமங்கலம் ரோட்டில் பன்னிக்குண்டு விலக்கு அருகே காயம்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். சிறிது துாரத்தில் டூவீலர் கிடந்தது. தவறி விழுந்து இறந்தாரா, வாகனம் மோதியதா, கொலையா என போலீசார் விசாரிக்கின்றனர்.

மின் ஊழியர் தற்கொலை

வாடிப்பட்டி: ஊர்மெச்சிகுளம் நாகலிங்கம் மகன் செல்வமணிகண்டன் 27. பசுமலை மின் அலுவலக வயர்மேன். திருமண ஏற்பாடு நடந்த நிலையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். காரணம் குறித்து சமயநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

கார் - ஆட்டோ மோதி ஒருவர் பலி

உசிலம்பட்டி: தேனி ஜம்பலிபுத்துார் கண்ணன் 32. தந்தை பழனியப்பன் 65, மற்றும் தாயாருடன் நேற்று காலை காரில் மதுரைக்கு வந்தார். காலை 7:00 மணியளவில் உசிலம்பட்டி கணவாய் இறக்கத்தில் வந்த போது எதிரே தேனி அல்லிநகரம் தருண்குமார் என்பவருடன் பாண்டி ஓட்டி வந்த லோடு ஆட்டோவும் காரும் மோதியதில் பழனியப்பன் இறந்தார். மற்ற 4 பேரும் காயமுற்றனர். உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

டூவீலர் திருடிய 4 பேர் கைது

திருநகர்: ஹார்விபட்டி அண்ணாமலை கார்த்திக் 32. வீட்டின் முன்பு இவரது டூவீலரை திருடியதாக மூலக்கரை கார்த்தி 22, தென்பரங்குன்றம் பாலமுருகன் 23, பசுமலை கார்த்திக் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மகனை மிரட்ட துாக்கு போட்ட தாய் இறப்பு

மேலுார்: அ.வல்லாளப்பட்டி கற்பக ஜோதி 43. ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர். மகன் சவுந்தரபாண்டி 23, சென்னையில் பேக்கரியில் மாஸ்டராக உள்ளார். விடுமுறையில் ஊருக்கு வந்தவர் வேலைக்கு செல்லவில்லை. அவரை மிரட்டுவதற்காக சேலையில் கற்பக ஜோதி துாக்கு மாட்டியபோது எதிர்பாராதவிதமாக கழுத்து இறுகியதில் மூச்சுத் திணறி இறந்தார். மேலவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.

'லிப்ட்' கேட்டு பயணித்தவர் பலி

மேலுார்: கீழையூர் சித்திரவேல் 55. கூரியர் நிறுவன ஊழியர். நேற்று மாலை டூ வீலரில் மேலுாரில் இருந்து ஊருக்கு சென்றபோது சுந்தர வள்ளி அம்மன் கோயில் அருகே அதே ஊரைச் சேர்ந்த வெள்ளை பனையன் 52, 'லிப்ட்' கேட்டு சென்றார். கீழையூர் அருகே பின்னால் மதுரை -- புதுக் கோட்டை தனியார் பஸ் மோதியதில் வெள்ள பனையன் இறந்தார். சித்திரவேல் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ