| ADDED : ஜூலை 01, 2024 05:44 AM
முதியவர் படுகொலைமதுரை: யாகப்பா நகர் பிரதான சாலையை சேர்ந்தவர் முருகேசன் 60. இவரது 2 மகன்கள் வெளிநாட்டில் வசிக்கின்றனர். மகள் கணவருடன் வசிக்கிறார் அதே பகுதியில் வசிக்கிறார். முருகேசன் நேற்று இரவு 7:30 மணிக்கு வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், வீட்டு வாசலில் வைத்து அவரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இதற்கிடையே அந்த பகுதியில் வசிக்கும் முருகேசனின் மகள் அலைபேசியில் தொடர்பு கொண்ட போது முருகேசனிடமிருந்து பதில் இல்லை. இதனால் கணவரை அனுப்பி நேரில் பார்த்து வர கூறினார். அவர் அங்கு சென்று பார்த்த போது, முருகேசன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அண்ணா நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு துணை கமிஷனர் மதுகுமாரி தலைமையிலான போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.கர்ப்பிணி உயிரிழப்புமதுரை: திருப்பூர் குமாரநாதபுரத்தை சேர்ந்தவர் உதயகுமார். இவரது மனைவி பிரீத்தி 29. ஒன்பது ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவரும் மதுரை தோப்பூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிக்கின்றனர். பிரீத்தி 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியில் உயிரிழந்தார். அவரது அம்மா ஸ்டெல்லா மேரி ஆஸ்ட்டின்பட்டி போலீசில் புகார் செய்தார்.போலீசார் விசாரிக்கின்றனர்.நால்வர் கைதுமதுரை: வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் மனோஜ்குமார். சோலையழகுபுரம் வெல்டிங் பட்டறையில் வேலை செய்கிறார். வேலை முடிந்து அவர் எம்.கே.புரம் பகவதி அம்மன் கோயில் வழியாக சென்றபோது அப்பகுதியைச் சேர்ந்த நால்வர் அவரை தாக்கினர். காயமடைந்த மனோஜ்குமார் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது தாய் முனீஸ்வரி அளித்த புகாரின்பேரில் எம்.கே.புரத்தை சேர்ந்த 17 வயது சிறுவன், கார்த்திகேயன் 19, சசிகுமார் 19, சோலையழகுபுரம் சூர்யா 20, ஆகியோரை ஜெய்ஹிந்துபுரம் போலீசார் கைது செய்தனர்.