மேலும் செய்திகள்
விற்பனைக்கு மது பாட்டில் கடத்திய பெண் கைது
26-Aug-2024
கேரள லாட்டரி விற்றவர் கைதுதல்லாகுளம்: போலீஸ் இன்ஸ்பெக்டர் தனபாக்கியம். இவர் போலீசாருடன் நாகனாகுளம் பகுதியில் ரோந்து சென்றார். வழிவிடும் முருகன் கோவில் அருகே தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி விற்ற முதியவர் ஒருவரை பிடித்தனர். அவரிடம் இருந்து கே.ஆர் 671 என்ற லாட்டரிகள் பன்னிரெண்டும், விற்பனை செய்த பணம் ரூ.3410, டூவீலர் ஒன்றையும் பறிமுதல் செய்து, கைது செய்தனர்.வீடு புகுந்து திருட்டுதிருமங்கலம்: கரடிக்கல்லைச் சேர்ந்தவர் மொக்கக் காளை 48. வீட்டை பூட்டிவிட்டு கதவின் அருகே சாவியை வைத்துச் சென்றார். மாலையில் வீடுதிரும்பிய அவரது மகன் கதவு திறந்திருந்தது கண்டு அதிர்ந்தார். வீட்டிற்குள் திருடன் ஒருவன் திருடிக் கொண்டிருந்தான். மொக்க காளையின் மகனை கீழே தள்ளி தப்பி ஓடிவிட்டான். பீரோவில் இருந்த அரைப்பவுன் தோடு, ரூ.20 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. திருமங்கலம் போலீசார் விசாரித்தனர். தேனி மாவட்டம் போடி அணைக்கரை பட்டி சூர்யா பிரகாஷ் 32, திருடியது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.ஆறு பவுன் நகை திருட்டுமதுரை: அச்சம்பத்து லட்சுமி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜன் 36. இவர் மனைவி பத்மபிரியா. இவர் மதுரை காமராஜ் பல்கலையில் பிஎச்.டி., படிக்கிறார். பாண்டியராஜன் வெளியே சென்றிருந்தார். அவரது மனைவி மாலையில் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த 6 பவுன் தங்க நகை மூன்று ஜோடி கொலுசுகள் திருடப்பட்டிருந்தது. நாகமலை புதுக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.துாக்கு போட்டு சாவுவாடிப்பட்டி: வெள்ளையம்பட்டி தீரன் நகரை சேர்ந்தவர் தியாகு 29. திருட்டு வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தார். மன அழுத்தத்தில் இருந்து வந்தவர் படுக்கையறைக்குச் சென்று துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். பாலமேடு போலீசார் தியாகுவின் இறப்பு குறித்து விசாரிக்கின்றனர்.காட்டுப்பன்றி மோதி விவசாயி பலி திருமங்கலம்: கள்ளிக்குடி அருகே மையிட்டான்பட்டியை சேர்ந்த விவசாயி மோகன் 31, நேற்று முன்தினம் இரவு இவர் கள்ளிக்குடியில் இருந்து திருமங்கலத்திற்கு டூவீலரில் (ஹெல்மெட் அணிந்திருந்தார்) சென்றார். நேசநேரி விலக்கு அருகே வந்தபோது கண்மாய் பகுதியில் இருந்து ரோட்டை கடக்க முயன்ற காட்டுப்பன்றி டூவீலர் மீது மோதியதில் துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே மோகன் பலியானார். திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.டூவீலர்கள் மோதலில் பெண் பலி திருமங்கலம்: விருதுநகர் மாவட்டம் கொத்தனேரியை சேர்ந்த சதீஷ்குமார் 38. தனியார் பஸ் நடத்துனர். இவரது மனைவி ராஜேஸ்வரி 30. நர்ஸ் ஆக பணியாற்றினார். நேற்று மதுரையில் உள்ள உறவினர் இல்ல விசேஷத்திற்காக சென்றவர்கள், டூவீலரில் திருமங்கலம் நோக்கி வந்தனர். அரசபட்டி பிரிவு அருகே எதிரே வந்த டூவீலர் மோதியதில் பின்னால் அமர்ந்திருந்த ராஜேஸ்வரி துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்த சதீஷ்குமார் சிகிச்சையில் உள்ளார். மோதி தப்பிய டூவீலரில் வந்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.பஸ் மோதி ஒருவர் பலிபேரையூர்: காடனேரியைச் சேர்ந்தவர் சந்திரன் 60. நேற்று முன்தினம் மதுரை- ராஜபாளையம் ரோட்டில் உள்ள காடனேரி விலக்கில் நடந்து சென்றார். ராஜபாளையத்தில் இருந்து மதுரை சென்ற அரசு பஸ் மோதி இறந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.உண்டியலை உடைத்து திருட்டுபேரையூர்: பெருங்காமநல்லுாரில் பெத்தனசாமி கோயில் உள்ளது. பூசாரி ராதாகிருஷ்ணன் கடந்த செப். 12 இரவு கோயிலை பூட்டிச் சென்றார். மறுநாள் காலை கோயிலை திறந்த போது அங்கிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து பணம் திருடு போயிருந்தது தெரிய வந்தது. சேடபட்டி போலீசார் கோவிலில் உள்ள சி.சி.டி.வி., கேமரா மூலம் விசாரிக்கின்றனர்.மது விற்றவர்கள் கைதுபேரையூர்: பெருங்காமநல்லுார் பிச்சைமணி 40. இவர் அதே ஊரில் உள்ள அரசு பள்ளி அருகே மது விற்றுக் கொண்டிருந்தார். ரோந்து சென்ற சேடபட்டி எஸ்.ஐ கருப்பையா அவரை கைது செய்து 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்தார்.*அலங்காநல்லுார்: கள்வேலிப்பட்டி பகுதியில் எஸ்.ஐ.,க்கள் ராஜா, கஜேந்திரன் மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து சென்றனர். அப்பகுதியில் புதிய பால கட்டுமானம் அருகே மது விற்ற அ.கோவில்பட்டியை சேர்ந்த ராமர் 48, சந்தானத்தை 48, கைது செய்தனர். அவர்களிடமிருந்து 77 மது பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டன.----ஆடுகள் திருட்டுவாடிப்பட்டி: கச்சைகட்டி விவசாயி தங்கையா 41, பூச்சம்பட்டியில் உள்ள இவரது தோட்டத்தில் கொட்டகை அமைத்து ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கொட்டகையில் அடைத்திருந்த 3 ஆடுகள் திருடு போனது. வாடிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
26-Aug-2024